Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் தண்ணீர் பிரச்சனை… இரு தரப்பினரின் மோதல்… கைது செய்த காவல்துறையினர்…!!

தண்ணீர் பிடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் 3 பேர் இணைந்து ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வ்ல்லாரோடை கிராமத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது சரஸ்வதிக்கும், அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரது மனைவியான வேலுமணி என்ற பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து இரு பெண்கள் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்த உடன் சரவணன் தனது தம்பியான செல்வராஜ் மற்றும் நண்பரான அலெக்சாண்டர் ஆகியோருடன் இணைந்து பூபதியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் பூபதி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணன் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |