16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மகாதானபுரம் பகுதியில் மணிகண்டன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பின் மணிகண்டன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் சிறுமி தற்போது இரண்டு மாத கர்ப்பமாக இருக்கின்றார்.
இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.