திருத்துறைப்பூண்டியில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்புசி செலுத்தாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அரசு எடுத்துக் கூறி வருகின்றது.
இதனால் பொதுமக்கள் தடுப்புசி செலுத்துவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான ஆண்கள், பெண்கள் தடுப்புபூசி செலுத்துவதற்கு குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆகையால் வரிசையில் வந்தவர்களில் 200 பேருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால் நீண்ட வரிசையில் காத்திருந்த மீதமுள்ள பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனவே தடுப்பூசி செலுத்தாமல் சென்ற அனைவருக்கும் வரும் நாட்களில் செலுத்தப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.