Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் வங்கி சேவை இயங்காது…. SBI திடீர் அறிவிப்பு…!!!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு பல கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வங்கியானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சேவையை வழங்கி வருகிறது. 85 மில்லியன் இன்டர்நெட் பேங்கிங் மற்றும் 19 மில்லியன் மொபைல் பேங்கிங் பயனர்களையும் கொண்டுள்ளது. மக்களின் வசதிக்காக எஸ்பிஐ சார்பில் யோனா மற்றும் யோனா லைட் ஆப் நடைமுறையில் உள்ளன. இந்த ஆப் மூலமாக பணப் பரிவர்த்தனைகள், டிக்கெட் புக்கிங், ஆன்லைன் ஷாப்பிங், பணம் செலுத்துதல் போன்ற சேவைகளுக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்டர்நெட் வங்கி சேவை வழங்கும் தளத்தை மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் இன்று நள்ளிரவு 12.30 மணி முதல் 2.30 மணி வரை ஆன்லைன் வங்கிச் சேவை செயல்படாது என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது. அதன்படி  இன்டர்நெட் வங்கி சேவை, யோனா செயலி, யோனா லைட், யுபிஐ உள்ளிட்ட சேவைகள் செயல்படாது. இதற்கு வடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |