Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு… எவ்வளவோ முயற்சி பண்ணேன்… அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர்…!!

சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து அதை ஒட்டி வந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள‌ தொப்பூர் கணவாய் வழியாக பெங்களூரில் இருந்து சேலத்திற்கு லாரியில் சிமெண்ட் லோடுகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். இந்த லாரியை தொப்பூர் பகுதியில் வசிக்கும் ரத்தினம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சிமெண்ட் லோடுகளை ஏற்றி வந்த லாரியானது வளைவு பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது ஓட்டுனரின் செயலிழந்து சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி சென்ற ரத்னம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது பற்றிய தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தினத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் தர்மபுரி-சேலம் ஆகிய தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின் சுங்கச்சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |