சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான பள்ளியில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் சோதனை செய்து புகாரில் சிக்கிய ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில் புதுப்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளியில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் நேற்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து புகாரின்படி சிக்கிய ஆசிரியர்கள் சிலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதற்கிடையில் பள்ளியிலிருந்து 4 மடிக்கணினிகள் 2 கம்ப்யூட்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். எனவே இந்த சூழ்நிலையில் பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுமம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.