மியான்மரில் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த இரண்டு புதிய மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் கண்டறியப்பட்ட 2 மாதிரிகளினுடைய மென்மையான திசுக்களின் மூலமாகவும், தாடை எலும்புடன் இணைந்திருக்கும் பற்களின் மூலமாகவும் விஞ்ஞானிகள் இந்த மர்ம விலங்கின் உடல் பண்புகளை கண்டறிந்துள்ளார்கள். இதனால் இந்த மாதிரிகள் புதிய வகை பல்லியினமாகவோ அல்லது டைனோசராகவோ அல்லது மிகச் சிறிய பறவையாகவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளார்கள்.
இதுகுறித்து ஸ்பெயின் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து ஒருவர் கூறியதாவது, இந்த மாதிரிகள் பல்லி இனத்தை சார்ந்தவை என்று நினைத்தோம். ஆனால் இது தற்போது இருக்கும் பல்லியினங்களுடன் ஒத்திருக்கவில்லை என்றுள்ளார். மேலும் டைனோசர்களின் பற்கள் தாடை எலும்புடன் இணைக்கப்பட்டிருப்பதில்லை. ஆனால் இந்த மாதிரியில் தாடை எலும்பில் பற்கள் உள்ளது. எனவே இதன் உடற்கூறுகள் டைனோசர் இனத்தை முழுவதுமாக காண்பிக்கவில்லை.
மேலும் இந்த மாதிரிகளின் கண் அமைப்பு, தாடை எலும்புகளுடன் இணைக்கப்பட்ட பற்கள், தோள்பட்டை எலும்பு மற்றும் குச்சி வடிவ மண்டையோடு போன்றவற்றை பார்க்கும்போது இது ஊர்வன இனத்தை சார்ந்தவை என்று ஸ்பெயின் இன்ஸ்டிடியூட்டில் இருந்து ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் மியான்மரில் கண்டறியப்பட்ட இந்த 2 புதை படிவங்களும் வெவ்வேறு இனத்தை சார்ந்தவை என்றும் தெரிவித்துள்ளார்.