இந்தோனேஷிய அதிகாரிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாக கோழியை வழங்குகிறார்கள்.
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் பொதுமக்களுக்கு தடுப்பூசியை போடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். ஆனால் அனைத்து நாடுகளிலுமே சில பொதுமக்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். அதேபோல் இந்தோனேசியாவிலிருக்கும் Cipanas பகுதியிலுள்ள பொதுமக்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாமல் இருந்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்தோனேசியா நாட்டின் அதிகாரிகள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்பவர்களுக்கு இலவசமாக கோழி வழங்கப்படும் என்று அறிக்கை விடுத்துள்ளார்கள். இதனையடுத்து அப்பகுதியிலிருக்கும் பலரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு கோழியை பெற்று சென்றுள்ளார்கள்.