Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… சிம்பு ராக்கிங்… வாவ் எஸ்.ஜே.சூர்யா… ‘மாநாடு’ பிரபலத்தின் வைரல் டுவீட்…!!!

‘மாநாடு’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நடிகர் உதயா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மாநாடு படத்தின் முதல் பாடல் வருகிற ஜூன் 21-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் மாநாடு படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நடிகர் உதயா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘மாநாடு டப்பிங். வேற லெவல் காட்சிகள், மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த படத்தை பார்ப்பதற்காக காத்திருக்க முடியவில்லை ‌. நமது சிம்பு ராக்கிங். வாவ் எஸ்.ஜே.சூர்யா சார். எனது நண்பன் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு நன்றி. முதலாளி சுரேஷ் காமாட்சிக்கு நன்றி’ என குறிப்பிட்டுள்ளார். தற்போது நடிகர் உதயாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது

Categories

Tech |