Categories
உலக செய்திகள்

களமிறங்கிய போர் விமானங்கள்… பிரபல நாட்டை மிரட்டும் சீனா… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீனா தனது போர் விமானங்களை தைவானுக்கு அனுப்பி அந்நாட்டை தொடர்ந்து மிரட்டி வருகிறது.

சீனாவும், தைவானும் கடந்த 1949-ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்நாட்டு போரினால் பிரிந்துள்ள நிலையிலும் சீனா தனது நாட்டின் ஒரு பகுதி தான் தைவான் என்று தொடர்ந்து கூறி வருகிறது. அது மட்டுமில்லாமல் சீனா தேவைப்பட்டால் படை பலத்தை பயன்படுத்தி தைவானை கைப்பற்றவும் தயங்காது என்று மிரட்டல் விடுத்து வருகிறது. இந்நிலையில் தைவான் ராணுவ அமைச்சகம், சீனா தங்கள் நாட்டை நோக்கி இதுவரை இல்லாத அளவிற்கு 28 போர் விமானங்களை அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் அணுசக்தி திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்கள் உள்ளிட்ட 28 போர் விமானங்கள் நுழைந்துள்ளதாகவும் அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் ராணுவ அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சீன ராணுவத்தின் நடவடிக்கை குறித்து ஜி-7 மற்றும் நேட்டோ மாநாடுகளில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. மேலும் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும் அந்த மாநாடுகளின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |