மேகனுக்கு தற்போது தான் குழந்தை பிறந்துள்ளது என்பதால், அவர் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் டயானாவின் உருவ சிலை திறப்பு விழாவிற்கு செல்லவில்லை என்று டெய்லி மிரர் பத்திரிக்கைக்கு ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசி டயானாவின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி அவருடைய உருவச்சிலையை இளவரசர் ஹரியும், வில்லியமும் திறக்கவுள்ளார்கள். இதற்கிடையே இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளியே சென்ற இளவரசர் ஹரி தன்னுடைய தாத்தாவின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்கு தான் அந்நாட்டிற்கு திரும்ப வந்துள்ளார். ஆனால் இவரிடம் எவரும் சரிவர பேசாததால் இளவரசர் ஹரி மிகவும் மனவேதனை அடைந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய தாயாரான இளவரசி டயானாவின் உருவச்சிலையை திறந்து வைப்பதற்காக இளவரசர் ஹரி மீண்டும் இங்கிலாந்து வரவுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு மேகன் வருவாரா என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், அவருக்கு தற்போது தான் குழந்தை பிறந்துள்ளது என்பதால் அவர் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் டயானா சிலையின் திறப்பு விழாவிற்கு வரவில்லை என்று மேகனுக்கு நெருக்கமான ஒருவர் டெய்லி மிரர் என்னும் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார்.