Categories
தேசிய செய்திகள்

“எந்த பையனையும் எனக்கு பிடிக்கல”…. கல்யாணத்துக்கு No சொன்ன மகள்… சொந்த மகளையே எரித்த பெற்றோர்கள்… அதிர்ச்சி..!!

ஆந்திரா மாநிலத்தில், இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தினால் பெற்றோர்களே அப்பெண்ணை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கோதபள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள் வரன் பார்த்து வந்துள்ளனர். பெற்றோர்கள் பார்க்கும் எந்த பயனையும் அவர் பிடிக்கவில்லை என்று கூறி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த பெண்ணின் குடும்பத்தார் அந்த பெண்ணை உயிருடன் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது பெற்றோர்கள் மற்றும் சகோதரனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது: “20 வயதான இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால் தனது வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைக்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். பெற்றோரிடம் தனது காதலை பலமுறை எடுத்துச் சொல்லியும் அவர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் தான் பார்க்கும் பையனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். இதற்கு அந்தப் பெண் முடியாது என்று தெரிவித்த காரணத்தினால் பெற்றோர்கள் ஆத்திரமடைந்து அப்பெண்ணைப் உயிருடன் தீ இட்டு கொளுத்தி இருப்பதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெற்றோர்களை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |