சுவிட்சர்லாந்தில் இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பை எதிர்த்து ஒசாமா பின்லேடனின் சகோதரர் மகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் சந்தித்து கலந்துரையாடினார்கள். அவர்களின் பேச்சுவார்த்தையானது சுமார் 4 மணி நேரம் நடந்து நல்லபடியாக முடிந்ததாக இரு நாட்டு தலைவர்களும் கூறினர்.
இந்நிலையில் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான, ஒசாமா பின்லேடனின் சகோதரர் மகளான Noor bin Ladin என்பவர் ஜெனீவா நகரின் ஏரியில் ஒரு படகில் பயணித்துக் கொண்டு, “ட்ரம்ப் வெற்றி பெற்றார்” என்ற பதாகையை சுமந்தபடி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்.
Today in WTF: Noor bin Laden, Osama bin Laden's niece, protests the Biden-Putin summit in Geneva with a "Trump Won" flag. pic.twitter.com/pwVW0rsh8A
— The Recount (@therecount) June 16, 2021
இவர் ட்ரம்பின் ஆதரவாளர் ஆவார். இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆர்ப்பாட்டம் நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் ஆதாரமில்லாமல் அரசியல் நம்பிக்கை கொண்டிருப்பதாக என்னை கைது செய்ய காவல்துறையினர் மிரட்டல் விடுத்தனர். ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக காவல் துறையினரின் 2 படகுகள் மற்றும் ராணுவ படகும் தன் படகை சுற்றி நின்றதாக தெரிவித்திருக்கிறார்.