தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்து கோவில்கள் தொடர்பான குறைகளை பதிவிட தனி செயலி தொடங்கப்பட்டு உள்ளது எனவும் இதுவரை 1,600 மனுக்கள் வந்துள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா நோய்த்தொற்று விரட்டப்பட்டு விடும் என்ற நம்பிக்கை உள்ளது. கொரோனா அச்சம் விலகும் நிலையில் கோவில்கள் விரைவில் திறக்க பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.