தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் தொடரும் நிலையில் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது. அதை தொடர்ந்து இன்று கோவையில் உள்ள நாகா சாய் டிரஸ்ட் ஹாலில்,கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சிறு குறு நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் ஒன்றை ஒழுங்கு செய்தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.