ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுகுடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் நேரு ஆய்வு செய்த போது பரமக்குடி எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்ய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு பரமக்குடிக்கு வந்துள்ளார். இந்நிலையில் அங்கு சென்ற எம்.எல்.ஏ முருகேசன் பொதுமக்கள் சார்பில் அமைச்சரிடம் மனு அளித்துள்ளார். இதனையடுத்து அந்த மனுவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி பணியாளர்களை முன்கள பணியாளர்களை அறிவித்து அவர்கள் பணியை நிரந்தரம் செய்வதுடன் அவர்களுக்கு ஊக்க தொகையும் வழங்க வேண்டும்.
இதனைத்தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் எனவும், பரமக்குடி பகுதியில் பாதாள சாக்கடை நிறைவேற்றி தரவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் பரமக்குடி வைகை ஆற்றின் இருபுறம் உள்ள சாலையில் மின்விளக்குகளை அமைக்கவேண்டும் என்றும், குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் இருந்துள்ளது.