தமிழகத்தில் நீர்நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு பெரும்பள்ளம் ஓடை இன் இருபுறங்களிலும் கான்கிரீட் சுவர் எழுப்பும் திட்டத்திற்கு தடை கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், “தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது. நீர்நிலைகளை சிதைக்காமல் காக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் செயற்கைக்கோள் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய மூன்று வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
Categories