அணு ஆயுத சோதனைகள் மூலம் உலகையே மிரட்டி வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சமீபத்திய புகைப்படம் அனைவரிடத்திலும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் தலைவராக கடந்த 2011-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற கிம் ஜாங் உன் அந்நாட்டு மக்களையும், அதிகாரிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து வருகிறார். மேலும் நாட்டிற்குள் ஒரு சிறிய தவறு கூட நடக்க விடாமல் மரண தண்டனை வழங்கவும் தயங்காமல் மிக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் அணு ஆயுத சோதனைகள் மூலம் உலகையே மிரட்டி வருகிறார். பல நாடுகளுடைய எதிர்ப்புகளையும் தாண்டி அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வந்த கிம் ஜாங் உன் திடீரென கடந்த வருடம் மாயமானார்.
இதன் காரணமாக அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் ஜிம் ஜாங் உன் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அவருடைய உடல்நிலை குறித்து மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்து வருகிறது. சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது 140 கிலோ எடை கொண்ட கிம் ஜாங் உன் 20 கிலோ எடை குறைந்திருப்பதாக அனைவராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அவர் இயற்கையாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளாரா அல்லது உடல் ஆரோக்கியத்திற்காக எடையை குறைத்துள்ளாரா என்பது குறித்த கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. மேலும் கிம் ஜாங் உன்னுக்கு புகை மற்றும் மது அருந்தும் பழக்கம் உள்ளிட்டவை இருப்பதால் தந்தை, தாத்தா போன்று அவரும் இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று பல வருடங்களாக கூறப்பட்டு வருகிறது.