உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் தொடர்பில் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் வருடத்தில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா, படிப்படியாக உலகம் முழுவதும் பரவியது. எனினும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டதால், பல்வேறு நாடுகளில் கொரோனா குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். எனினும் கொரோனா தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது.
எனவே உலக நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 17.77 கோடி மக்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இதில் 16.22 கோடி நபர்கள் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தடுப்பூசி ஒன்று தான் கொரோனாவிற்கு தீர்வாக உள்ளது. தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்திய நாடுகள் கொரோனாவிலிருந்து மீண்டு வருவது குறிப்பிடத்தக்கது.