Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இருக்கைக்கு அடியில் இருந்த 3 பைகள்…. உள்ளே இதுதான் இருக்கா…. அதிச்சியடைந்த காவல்துறையினர்….!!

மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டுவந்த புகையிலை பொருட்களை  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் 1 மாதத்திற்கும் மேலாக மதுக் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் மது பிரியர்கள் வெளிமாநிலத்தில் இருந்து ரயிலில் மதுவை கடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தில் மைசூர்- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் தினசரி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் மதுபானம் பறிமுதல் செய்யப்படுவதோடு பலரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் ரயில்வே காவல்துறையினர் மைசூர எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனையை மேற்கொள்கின்றனர்.

அதன்படி காலை 6 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் காவல்துறையினர் சோதனையிட்டதில் ரயில் பெட்டியில் ஆளில்லாத ஒரு இருக்கைக்கு கீழே இருந்த 3 பைகள் கேட்பாரற்று இருந்தது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த பைகளை சோதனையிட்டதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 30 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. அதனை கடத்தி வந்தவர் காவல்துறையினரை கண்டதும் தப்பி சென்றிருக்கலாம் என்று தெரிகின்றது. இதனையடுத்து புகையிலை பொருட்களை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு மைசூர் ரயிலில் மதுவை தொடர்ந்து புகையிலைப் பொருட்கள் சிக்கியிருப்பது காவல்துறையினர் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |