தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமரை முதல்வர் முக ஸ்டாலின் இன்று சந்தித்து பேச தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். இதையடுத்து டெல்லி சென்ற முதல்வர் பிரதமர் மோடியுடன் பேசினார். அப்போது முதல்வருடன் நீர்வளத்துறை அமைச்சர் துறைமுறைகண் உடனிருந்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக மோடியிடம் ஸ்டாலின் ஆலோசனை செய்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவை அளித்துள்ளார். இதனையடுத்து பிரதமருடனான 25 நிமிட சந்திப்பு நிறைவடைந்தது.
இந்நிலையில் பிரதமர் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், பிரதமருடனான சந்திப்பு மனநிறைவாக இருந்ததாகவும், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதற்காக தனது வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்தார் என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதக கூறியுள்ளார். தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.