Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காற்றில் பறந்த விதிமுறைகள்… மது பிரியர்களின் தள்ளுமுள்ளு… சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு…!!

கொரோனா கட்டுப்பாட்டு விதி முறைகளை பின்பற்றாத மதுபிரியர்கள் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2-ம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிப்பும் சற்று குறைந்த மாவட்டங்களில் படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக், சலூன், போன்ற கடைகளை கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக பின்பற்றி திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து மதுபானம் வாங்க செல்லும் மது பிரியர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும், ஒருவரை ஒருவர் இடித்து தள்ளிக் கொண்டு மதுபானங்களை வாங்கி செல்வதாக  சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுபான கடைகள் திறக்கப்படாததால் அங்கு இருக்கும் மதுப் பிரியர்கள் நீலத்தநல்லூர், மதனத்தூர், பாலம் வழியாக நடந்தும் கொள்ளிடம் ஆற்றில் இறங்கியும் சென்று மதுபானம் வாங்கி செல்கின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் மது பிரியர்கள் காவல்துறையினரிடம் சிக்காமல் வயல் வழியாக சென்று மதுபானம் வாங்கிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |