மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சண்முகநாதபுரம் கிராமத்தில் ஒரு பண்ணைகுட்டையில் அனுமதியின்றி மணல் அள்ள படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து அங்கு மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து வரதராஜன் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.