Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரூ.25 கோடிக்கு விற்கப்பட்ட நயன்தாரா படம்… வெளியான தகவல்…!!!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக  ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். மேலும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார் . இந்த படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Netrikann Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News & Videos  | eTimes

இந்நிலையில் நெற்றிக்கண் படத்தின் ஓடிடி உரிமை ரூ.25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் சம்பளம் தவிர்த்து இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.5 கோடி ஆகும் . இதனால் ரிலீசுக்கு முன்பாகவே ரூ.20 கோடி வரை லாபம் சம்பாதித்துள்ளனர். மேலும் நயன்தாராவின் படங்களில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |