Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து…. காவல் அதிகாரி பரிதாபம்…. சிவகங்கையில் சோகம்….!!

லாரி மோதிய விபத்தில் காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கீழப்பசலை கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இரவு வேலை நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் கண்ணன் சென்றுள்ளார். அப்போது மதுரை- ராமேசுவரம் நெடுஞ்சாலையில் மேலப்பசலை கிராமத்தின் அருகில் வந்தபோது எதிரே வந்த லாரி கண்ணன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதனால் பலத்த காயமடைந்த கண்ணன் அருகில் இருப்பவர்கள் மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து கண்ணன் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |