பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு பொதுமக்கள் வரக்கூடாது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
Wembley நகரில் யூரோ கால்பந்து போட்டியானது, வரும் ஜூன் 19ஆம் தேதியன்று மாலை நடக்கிறது. இதில் இங்கிலாந்து அணி, ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. எனவே போட்டியை காண்பதற்கு டிக்கெட் இல்லாமல் மக்கள் லண்டனுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று காவல்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லண்டனின் பெருநகர காவல்துறை துறை உதவி ஆணையர் Laurence Taylor தெரிவிக்கையில், எங்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த நிகழ்வை காண்பதற்கு லண்டன் வர மக்கள் விரும்புவது தெரிகிறது. எனினும் லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா விதிமுறைகளின் படி, மதுபான விடுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய நபர்களுக்கு தான் அனுமதி உண்டு. எனவே விதிமுறைகளை மீறி அதிக அளவில் பொதுமக்கள் கூடினால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.