Categories
மாநில செய்திகள்

எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் – சபாநாயகர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்த்தொற்று அச்சத்தின் காரணமாக முக்கிய இடங்களுக்கு செல்லும்போது கொரோனா நெகட்டிவ் சான்று கேட்கப்படுகிறது.

இதற்கு மத்தியில் 21ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் கூட்டத்தொடருக்கு வரும் எம்எல்ஏக்கள், பணியாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும் நாளை முதல் கலைவாணர் அரங்கம் எம்எல்ஏக்கள் குடியிருப்பு, தலைமைச் செயலகத்தில் பரிசோதனை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |