அணையில் இருந்து தண்ணீர் வரத்தால் அறுவடைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை அமைந்துள்ளது. இந்நிலையில் கோமுகி அணைக்கு கல்வராயன் மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஆற்றின் வழியாக வரும் தண்ணீரை 44 அடி வரை சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டுக்கு ஒருமுறை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பாசனத்துக்காக தண்ணீரை வழக்கமாக திறக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்கு இவை மூலமாக தண்ணீர் வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த வருடம் சாகுபடிக்காக இவ்வணையில் இருந்து சென்ற அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி கல்வராயன்மலையும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர். இதில் அவ்வப்போது குறைவான மழை பெய்ததால் பயிர் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. இவற்றில் டி.ஏ.பி வகை நெற்பயிர் அதிக அளவாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதன்பின் பயிர் நன்றாக வளர்ச்சி அடைந்ததை அடுத்து அறுவடை செய்யும் பணி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் கச்சிராயப்பாளையம், வடக்கந்தல், பரிகம், மன்மலை ஆகிய பாசன அணைக்கட்டு வாய்க்கால் மூலமாக விவசாயிகள் நெல் அறுவடைப் பணியை தீவிரமாக செய்து வருகின்றனர்.