Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கவினின் ‘லிப்ட்’ பட பாடல் செய்த அசத்தல் சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

லிப்ட் படத்தில் இடம்பெற்ற இன்னா மயிலு பாடல் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் கவின். இதை தொடர்ந்து இவர் நட்புனா என்னனு தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லிப்ட் படத்தில் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

எக்கா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய இன்னா மயிலு பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த பாடல் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |