விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது விருதுநகர் சாலையில் சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் காசு வைத்து சீட்டு விளையாடியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராம சுந்தர்(28), மகாலிங்கம்(35), செந்தில்குமார்(28), ஈஸ்வரன்(30) என தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் சீட்டு விளையாடுவதற்கு பயன்படுத்திய பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.