உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. இதற்காக 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பட்டியல் முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிளேயிங் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இடம்பெறவில்லை.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் :
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷுப்மான் கில், புஜாரா, ரகானே, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஷ்வின், பும்ரா, இஷாந் சர்மா, முகமது ஷமி.
🚨 NEWS 🚨
Here's #TeamIndia's Playing XI for the #WTC21 Final 💪 👇 pic.twitter.com/DiOBAzf88h
— BCCI (@BCCI) June 17, 2021