தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் அடிப்படையில் ஊதியம் மற்றும் அகவிலைப்படிலிருந்து 10% ஊழியர்கள் வழங்கப்பட வேண்டுமென்று தெரிவித்திருந்தது. இதனால் அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக பல போராட்டங்கள் உண்ணாவிரதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து ஒவ்வொரு வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றி வருகிறார். அதன்படி இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது. இதற்கான அறிவிப்பை முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.