சூர்யாவின் 40வது படத்தை இயக்குனர் பாண்டியராஜன் இயக்கிவருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்க உள்ளார். இதைத்தொடர்ந்து முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்து வருகிறார்.
தற்போது இந்த படம் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்படும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஜூலை 15-ல் தொடங்குவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது.