கும்பம் ராசி அன்பர்களே.! குழப்பங்கள் இருக்கும்.
இன்று நல்ல நண்பர்களை சேர்த்துக் கொள்ளக் கூடிய அமைப்பு இருக்கின்றது. நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி என்பது கண்டிப்பாக இருக்கின்றது. ஆனால் கடின உழைப்பை செலுத்த வேண்டியிருக்கும். சந்திராஷ்டம தினம் முடியாததால் சில காரியங்களில் குழப்பங்கள் இருக்கும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். பெரியோர்களிடம் கலந்து ஆலோசனை செய்துவிட்டு பின்னர் முடிவெடுக்க வேண்டும். அரசுத் துறையில் முன்னேற்றம் ஏற்படும். சகோதர சகோதரிகளிடம் கவனமாக பேச வேண்டும். வார்த்தையில் கவனம் வேண்டும்.
பெண்கள் பொருட்களை இரவல் கொடுக்க வேண்டாம். காதல் சிரமத்தை ஏற்படுத்தும். இன்று எதையும் புரிந்து கொண்டு செயல்பட்டால் வெற்றி பெறமுடியும். மாணவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். கல்வி பற்றிய தெளிவான விளக்கங்கள் கிடைக்கும். மேற்கல்விக்கான முயற்சியில் முன்னேற்றம் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் இளம் மஞ்சள்