Categories
பேட்மிண்டன் விளையாட்டு

தங்கம் வெனற பி.வி சிந்து திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்.!!

தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த பிவி சிந்து திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் போட்டியில்  பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின்  இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக தங்கம் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி  வரலாற்று சாதனை படைத்தார்.

Image result for PV Sindhu Tirupati temple

உலக சாம்பியன்ஷிப் போட்டி வரலாற்றில் 42 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கம் வென்ற பிவி சிந்துவுக்கு பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்த் உட்பட  பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற பி.வி. சிந்து திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். வருங்காலத்தில் வரும் போட்டிகளில் வெல்ல வேண்டும் என்று ஏழுமலையானை தரிசித்ததாக பிவி சிந்து கூறியுள்ளார்.

Categories

Tech |