Categories
ஆன்மிகம்

உங்கள் வீட்டில் பணம் சேர…. பீரோவுக்கு மேலும் கீழும் இந்த பொருள் இருந்தாலே போதும்….!!!!

உங்கள் வீட்டு பீரோவை எந்த திசையில் வைத்திருந்தாலும் சரி, இரண்டு சிறிய குபேர பொம்மைகளை வடக்குப் பார்த்தவாறு, பீரோவுக்கு மேல் வைத்துவிடுங்கள். ஏதேனும் வாஸ்து பிரச்சனை உங்களுக்கு இருந்தால் கூட, இந்த குபேர பொம்மை அதை சரி செய்துவிடும். கண் திருஷ்டியால் ஏதேனும் கோளாறுகள் இருக்கும் பட்சத்தில், உங்கள் வீட்டு பீரோவுக்கு அடியில் இரண்டு சிறிய படிகார கட்டிகளைப் போட்டு வைக்க வேண்டும். படிகார கட்டிகளைப் போட்டு விட்டு, பீரோவுக்கு அடியில் சுத்தம் செய்யாமல், படிகார கட்டிகளில் ஒட்டடை படித்து, தூசி பிடித்து இருக்கக்கூடாது. பீரோவுக்கு அடியில் சுத்தம் செய்யும்போது, இந்த பரிகார கட்டிகளையும் தூசு துடைத்து வைக்க வேண்டும்.

இந்த படிகார கட்டியை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. உங்கள் வீட்டு பீரோவுக்கு மேல் குபேரர், பீரோவுக்கும் அடியில் படிகாரத்தையும் வைத்து பாருங்கள். நிச்சயம் பண பிரச்சனையில் வித்தியாசம் தெரியும். கடன் சுமை படிப்படியாக குறையும். சரி, உங்களுக்கு கடன் பிரச்சனை அதிகமாக உள்ளது. பணத் தேவை கட்டாயம் இருக்கிறது. அவசரமாக வட்டி கட்டவோ, அசல் தொகையை திருப்பிக் கொடுக்கவும் உங்களது தேவையை பூர்த்தி செய்யவும், பணம் வேண்டும். எவ்வளவு தொகையாக இருந்தாலும் சரி. உங்களது வீட்டில் வடகிழக்கு மூலையில் ஒரு மனப் பலகையையோ அல்லது ஒரு ஸ்ட்டூலையோ வைத்து விடுங்கள்.

அதன் மேல் சிறிய தட்டில், ஒரு மண் அகல் விளக்கை வைத்து, சுத்தமான பசு நெய் ஊற்றி, தீபம் ஏற்றிட வேண்டும். தீபம் 24 மணி நேரமும் எரிந்தால் கூட தவறு கிடையாது. தீபம் எவ்வளவு நேரம் தொடர்ந்து எரிகின்றதோ, அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு பணம் கிடைக்கும். சில சமயத்தில் உங்களால் நெய் ஊற்ற முடியாமல், தீபம் குளிர்ந்து போனாலும் மன கஷ்டப்பட வேண்டாம். இல்லை பகல் முழுவதும், தீபத்தை எரிய வைத்து விட்டு, இரவு நேரத்தில் பூர்த்தி செய்துவிட்டு, மீண்டும் காலை ஏற்றி பகல் நேரம் முழுவதும் ஏற்றி வைத்தாலும் சரி, உங்களது பணத்தேவை விரைவில் பூர்த்தியடையும்.

வடகிழக்கு மூலையில் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, பணம் வேண்டும் என்ற வேண்டுதலை அந்த மகாலட்சுமியிடமும் குபேரரிடமும் வையுங்கள். எந்த ரூபத்திலாவது, பணம் உங்களிடம் வந்து சேருவதை நீங்கள் கண்கூடாக காணமுடியும். ஏற்றக்கூடிய தீபத்தை நம்பிக்கையோடு ஏற்றுங்கள். முதல் நாள் தீபம் ஏற்றி பணம் கிடைக்கவில்லை என்றதும், மனம் தளர்ந்து விடக்கூடாது. அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாளும் முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

வெறும் நெய்யை ஊற்றி தீபம் ஏற்ற முடியவில்லை என்று நினைப்பவர்கள், நல்லெண்ணெயில் நெய் கலந்தும் தீபம் ஏற்றலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு இந்த பரிகாரம் கைமேல் பலன் தரும் பட்சத்தில், எப்போதெல்லாம் அவசரமாக பணம் தேவையோ அப்போதெல்லாம் இந்த தீபத்தை ஏற்றி வைக்கலாம் .

Categories

Tech |