கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்து இரு மடங்கு வருமானம் ஈட்டுவது எப்படி என்பது குறித்து இதில் பார்ப்போம்.
தபால் அலுவலகம் வழியாக இந்திய தபால் துறை பல்வேறு நிதி சேவைகளை செய்து வருகிறது. முதலீட்டுக்கான வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. மிகப்பிரபலமான இந்த முதலீடு திட்டத்தில் தொகை 124 மாதங்களில் இரு மடங்காக உயர்ந்து விடும். விவசாயிகள் லாபம் பெற வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மற்றவர்களுக்கு இதில் முதலீடு செய்யலாம். இந்த திட்டம் நன்கு வரவேற்பு பெற்றுள்ளது.
2020-21 ஆம் ஆண்டுகளில் 6.9 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருமானம் கிடைப்பது உறுதி என்பதால் பாதுகாப்பான முதலீடாகும். யார் வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். இந்திய குடிமக்கள், 18 வயதுக்கு மேற்பட்டோர், 18 வயதுக்கு கீழானவர்கள் பெயரில் பெற்றோர்கள் முதலீடு செய்யலாம். அறக்கட்டளைகளும் முதலீடு செய்யலாம். மெச்சூரிட்டி சமயத்தில் தொகை மற்றும் வட்டி உள்ளிட்ட ஒட்டுமொத்த தொகையும் வழங்கப்படும்.
கிசான் விகாஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று முகவரி ஆவணங்களை சமர்ப்பித்துச் சேமிப்பைத் துவங்கலாம். மைனர் பெண் அல்லது சிறுவர்களின் பெயர்களில் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர் முதலீடு செய்ய முடியும். இத்திட்டத்தில் இணைந்த உடன் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று அதற்கான பாஸ் புக்கை பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் எதிர்பாராத விதத்தில் மரணமடையும் பட்சத்தில் அவர்கள் பரிந்துரைக்கப்பட்ட நாமினி அல்லது மற்றவர்கள் முதிர்ச்சி தொகையை பெறுவதற்கு வசதி உண்டு.