கடன் செயலிகள் மூலம் சிலர் கடன் பெறுவது வழக்கம். ஆனால் கடன் செயலிகள் மூலம் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக எப்படி கடன் பெறலாம் என்பது குறித்து வங்கி அதிகாரிகள் ஆலோசனை தருகின்றனர். அதன்படி, வீட்டில் அல்லது வங்கி லாக்கரில் உள்ள நகைகளை வைத்து கடன் பெற பரிசீலிக்கலாம். அதற்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு. உறவினர் நண்பர்களிடம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கலாம். வங்கியில் தனிநபர் கடன் பெறலாம் அல்லது சொத்து ஆவணங்களை வைத்து கடன் பெறலாம். தேவையைப் பொறுத்தே கிரெடிட் கார்டு கடனை பரிசீலிக்கலாம். பொதுமக்கள் இதனை செய்து கடன் செயலிகள் மூலம் கடன் பெறுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
Categories