பாலிடெக்னிக் மாணவரை 5 பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் பகுதியில் பழனி என்ற டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கோயம்பேடு பகுதியில் இருக்கும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு அருகே உள்ள மைதானத்தில் கணேசன் தனது நண்பர்கள் இருவருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் 5 பேர் இங்கு வந்து ஏன் மது அருந்துகிறீர்கள் என்று கூறி நண்பர்களுடன் தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து அச்சத்தில் தப்பியோடிய அந்த 3 பேரையும் அந்த மர்ம நபர்கள் விடாமல் விரட்டி சென்றுள்ளனர்.
அதன்பின் கீழே விழுந்த கணேசனை 5 பேரும் இணைந்து சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் படுகாயமடைந்த கணேசனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பழனி ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.