பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த காதல் தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சந்திரன் மது குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் சரண்யா அவரை திட்டியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.