செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா
தேவையான பொருட்கள் :
பன்னீர் – 1 கப்
தக்காளி – 2
வெங்காயம் – 2
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கிராம்பு – 2
பட்டை – சிறிய துண்டு
பிரியாணி இலை – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 5
மிளகு – 10
சீரகம் – 1 டீஸ்பூன்
முந்திரி – 10
கசகசா – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 6 பல்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்சியில் காய்ந்த மிளகாய் , மிளகு , சீரகம் , முந்திரி , கசகசா , இஞ்சி , பூண்டு ,வெந்தயம் ,மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, வெந்தயம், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, கறிவேப்பிலை போட்டு அரைத்த வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவேண்டும் . பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து கொதிக்கவிட்டு, கொத்தமல்லி தூவி இறக்கினால் அசத்தலான செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா தயார்!!!