பாகற்காய் ரசம்
தேவையான பொருட்கள் :
பாகற்காய் – 1/4 கிலோ
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
புளி – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – சிறிதளவு
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாகற்காயை நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் , புளிக்கரைசல் சேர்த்து, வேக விட வேண்டும். பாகற்காய் நன்கு வெந்ததும், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , காய்ந்த மிளகாய் ,கறிவேப்பிலை ,வெந்தயம் , பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கொட்டிகொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் பாகற்காய் ரசம் தயார் !!!