Categories
மாநில செய்திகள்

சிமெண்ட் விலை ஒரே மாதத்தில்…. ரூ.530 ஆக உயர்வுக்கு காரணம் என்ன…? – ஹெச்.ராஜா கேள்வி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் ஊரடங்கில்  கட்டுமான பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூபாய் 370 லிருந்து 520 ஆகவும், எம் சாண்ட் மணல் ஒரு யூனிட் ரூ.3600இலிருந்து 4000 ஆகவும், முக்கால் அங்குல ஜல்லி ஒரு யூனிட் ரூபாய் 2500 லிருந்து ரூ.2,800 ஆகவும், ஒன்றரை அங்குல ஜல்லி ஒரு யூனிட் 2,450 இருந்து 2,600 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய சிமெண்ட் விலை குஜராத்தில் ரூ.330, டெல்லியில் ரூ.350, ஆந்திராவில் ரூ.380, தமிழ்நாட்டில் மே இரண்டாம் தேதி வரை ரூ.380 ஆக இருந்த சிமெண்டின் விலை ஒரே மாதத்தில் ரூ.530 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு கார்ட்டல், கலெக்சன், கமிஷன் தான் காரணமா? என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தன்னுடைய பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |