ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் யூடியூப் மதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மதனின் சொந்த ஊரான சேலத்திற்கு சென்று தனிப்படை போலீசார் விசாரித்ததில் அவர் அங்கிருந்து தப்பி விட்டார் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்ட நிலையில் தர்மபுரியில் பதுங்கியிருந்த மதனை இன்று காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து மதனை கைது செய்தபோது தான் செய்தது தவறு தான் என்னை விட்டுடுங்க விட்டுடுங்க என்று கெஞ்சி அழுதுள்ளார். ஆனால் காவல்துறையினர் விடவில்லை. இதனையடுத்து அவரின் இரண்டு சொகுசு கார்கள், டேப் மற்றும் ட்ரான் கேமராக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.