இன்றைய காலகட்டத்தில் பாலியல் தொல்லை என்பது அதிகரித்து விட்டது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளை வெளியில் தனியாக விடுவதற்கு பயப்படுகிறார்கள். அந்த அளவிற்கு பெண் குழந்தைகளுக்கும், இளம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் இந்தியா மட்டுமல்லாமல் தற்போது தமிழகத்திலும் உருவாகிவிட்டது.
அந்த வகையில் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பேக்கரி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு 3 பேர் கொண்ட காம கொடூர கும்பல் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதையடுத்து வன்கொடுமை செய்ததாக கைதான சமீர், சிகாபுதீன் கைதான நிலையில் பேக்கரி உரிமையாளர் மொய்தீன் குட்டி தலைமறைவாகியுள்ளார்.