அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் கோவை பூ மார்க்கெட் சாலையில் மாநகராட்சி ஊழியர்கள் 10 பேர் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். அதன் பின் மாநகராட்சி ஊழியர்கள் அவர்களை முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களின் சளி மாதிரிகளை சேகரித்து மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
இவ்வாறாக அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு ஒரே நாளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் முகாமில் பங்கேற்று பொதுமக்கள் தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.