ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் யூடியூப் மதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்ட நிலையில் தர்மபுரியில் பதுங்கியிருந்த மதனை இன்று காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து மதனை கைது செய்தபோது தான் செய்தது தவறு தான் என்னை விட்டுடுங்க விட்டுடுங்க என்று கெஞ்சி அழுதுள்ளார். ஆனால் காவல்துறையினர் விடவில்லை. இதனையடுத்து அவரின் இரண்டு சொகுசு கார்கள், டேப் மற்றும் ட்ரான் கேமராக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன்படி புகழ்ந்து பேசுவது போலவும், திட்டுவது போல நடிக்கவும், ரூபாய் 5 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை மதன் சம்பளம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு பெண் தோழிக்கு ரூ. ஐந்து லட்சம் வரை சம்பளம் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.