மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ஒருசில மாநிலங்களில் ரூ.100 ஐ எட்டிவிட்டது.
இவ்வாறு பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் எரிபொருள் விலை உயர்வு நாடு முழுவதும் ஒரு பேசுபொருளாகவே மாறிவிட்டது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து மோடி தலைமையிலான அரசாங்கத்தில் என்றாவது ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லை என்றால் தான் அது செய்தி என்றும், இதுதான் மோடி அரசாங்கத்தின் முன்னேற்றம் என்றும் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.