Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோரிக்கைகளை வலியுறுத்தி… நாம் தமிழர் கட்சியினர்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் நம் தமிழர் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் பஜார் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வத்திராயிருப்பு தலைமை மருத்துவமனையில் போதிய அளவு மருத்துவர்கள் இல்லை என்றும், அந்த காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து சாட்டை துரைமுருகன், மகிலன், மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து வழக்கறிஞர் பிரிவு வீரமணி, பிரபாகர மூர்த்தி, மேற்கு மாவட்ட செயலாளர் பாலன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் அதிகரித்துக்கொண்டே வரும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Categories

Tech |