கொரோனா காரணமாக திரையரங்குகள் சென்று படங்கள் பார்ப்பது முடியாத ஒன்றாகிவிட்டது. எனவே தமிழ் படங்கள் ஓடிடியில் வெளியாக துவங்கியுள்ளது. அந்த வரிசையில் நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் நெற்றிக்கண் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில், ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நயன்தாரா கண் தெரியாதவராக இருக்கும் இப்படத்தை “அவள்” படம் இயக்கிய மலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் நெற்றிக்கண் திரைப்படம் வரும் ஜூலை 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 5 கோடியாம் (அவருடைய சம்பளம் தவிர்த்து) இந்த படத்தின் ஓடிடி உரிமை ரூபாய் 25 கோடிக்கு விற்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 20 கோடி லாபம் சம்பாதித்துள்ளனர். நயன்தாரா நடித்த படங்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.